About Us

Who We Are

நமது மதுரை ஆட்டோ கன்சல்டன்ஸ் அசோசியேஷன் குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் வணக்கங்கள்.

நமது சங்கமானது 1999இல் 33 உறுப்பினர்களோடு தோற்றுவிக்கப்பட்டு 2024ல் 168 உறுப்பினர்களாக உயர்ந்து சங்கத்தின் உயர்வுக்கும் பொருளாதார உயர்வுக்கும் உறுதுணையாக இருந்ததோடு அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வதிலும் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது..

மேலும் நமது சங்கத்தின் வளர்ச்சிக்கும் நமது அனைவரின் முன்னேற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நமது சங்கத்தின் சார்பிலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலே முதல் சங்கமாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நமது சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு சங்கத்தினுடைய அறக்கட்டளையாக திகழ்ந்து கொண்டிருக்கின்ற எம்.ஏ.சி.ஏ சாரிட்டபிள் டிரஸ்டில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு ஒரு புதிய கட்டிடத்தை நமக்கு என உருவாக்கி அதில் நமது சங்க செயல்பாடுகளை உங்கள் அனைவருடைய ஆதரவோடு செயல்படுத்துவோம்.

சங்க ஆரம்பகால முதல் இன்று வரை தொடர்ந்து சங்கத்தினுடைய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். எனவே எடுத்த காரியத்தை செயல்படுத்துவோம்,செய்து முடிப்போம்.